ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியை குறைந்த உறைநிலையில் சேமிக்க முடியும் என ஐரோப்பிய மருந்துகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியினை சேமித்து வைக்க 80°C உறை குளிர் தேவைப்பட்டிருந்தது.
பின்னர் அது -20°C தொடக்கம் -20°C வரையான குளிரில் சேமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவ்வாற உறை குளிரிலேயே இந்த தடுப்பூசி சேமிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு செல்வதிலும் சேமிப்பு செய்வதிலும் சில சிக்கல்கள் எழுந்திருந்தன.
இந்நிலையில், இந்த ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசி மருந்தினை -2°C தொடக்கம் -8°C வரையான குளிர்நிலையில் சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான குளிரில் இந்த தடுப்பூசி மருந்து சேமித்து வைக்கப்படும் போது 30 நாட்கள் வரை அது தன்மை மாறாமல் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.