கேரளாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் மூன்று அடுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொரோனா தொற்றின் 2ஆவது அலை கட்டுக்கடங்காத பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாகவுள்ளது.
இதனால் அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதிவரை 3 அடுக்க ஊரடங்கு உத்தரவை கேரள அரசு அமுல்படுத்தியுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் வழமையான ஊரடங்கு தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ வல்லுநர்கள், ‘இந்தவகை ஊரடங்கை 14 முதல் 21 நாட்களுக்கு கடைப்பிடித்தால் எத்தனை மோசமான தொற்று பரவலையும் கட்டுப்படுத்த முடியும்’ எனத் தெரிவித்துள்ளனர்.