கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, இன்று மற்றும் நாளை குறித்த விவாதம் இடம்பெறும் என்றும் விவாதத்தின் இறுதி நாளான நாளை பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.