இலங்கையில் இதுவரையில் 14 இலட்சத்து 14 ஆயிரத்து 861 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று மாத்திரம் 16 ஆயிரத்து 845 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது.
அதன்படி, நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 74 ஆயிரத்து 685 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் 7 ஆயிரத்து 275 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை 3 இலட்சத்து 4 ஆயிரத்து 961 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் நேற்றைய தினம் 17 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 14 ஆயிரத்து 934 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.