இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸின் மாறுபாடு, பிரித்தானியாவில் ஆதிக்கம் செலுத்தும் வகையை விட 50 சதவீதம் அதிகமாக பரவக்கூடியதாக இருக்கும் என்று வேல்ஸ் முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
வேல்ஸில் இதுவரை இந்திய கொவிட் மாறுபாடு வைரஸ் தொற்றுகள் 25ஆக உள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.
நியூபோர்ட், கார்டிஃப் மற்றும் ஸ்வான்சீ போன்ற நகர்ப்புற மையங்களில் இந்த வகை வைரஸ்கள் அதிகமாக உள்ளது.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பிரித்தானியாவில் இரட்டிப்பாகி வரும் வேகத்தைக் கருத்தில் கொண்டு கவலைப்படுவது சரியானது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் தடுப்பூசிகள் வழங்கப்படும்’ என உறுதியளித்தார்.