யாழ்ப்பாணத்தில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு பின்னர் யாழ்ப்பாண குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது யாழ்ப்பாணத்தில் 16.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பருத்தித்துறையில் 144.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் சாவகச்சேரியில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் இதற்கமைய யாழ்.மாவட்டத்தில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பிரதீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் நாட்களிளும் மழையுடன் கூடிய காலநிலையே யாழில் நிலவும் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.