சர்வதேச அழுத்தங்களை தொடர்ந்து 11 நாட்;களுக்கு பிறகு இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே நடைபெற்று வந்து மோதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சண்டை நிறுத்தம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினருக்கு இடையேயான சண்டை நிறுத்த பேச்சுவார்த்தையில் எகிப்து, கட்டார் மற்றும் ஐ.நா, மத்தியஸ்தம் செய்து வைத்தன
சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைப்பேசியில் அழைத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பாராட்டியுள்ளார்.
காசாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 232 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவில் கொல்லப்பட்டவர்களில் 150 பேர் ஹமாஸ் குழுவை சேர்ந்தவர்கள் என இஸ்ரேல் தெரிவிக்கிறது. ஆனால் ஹமாஸ் குழுவினர் தங்களை குழுவை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை வெளியிடவில்லை.
இஸ்ரேலை பொறுத்தவரை குழந்தைகள் உட்பட 12பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அதன் மருத்துவ சேவைகள் தெரிவித்துள்ளன.