ஜெனீவா பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், கனடாவின் டேனிஸ் ஷபலோவ் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
எதிர்பார்ப்பு மிக்க காலிறுதிப் போட்டியில், கனடாவின் டேனிஸ் ஷபலோவ், செர்பியாவின் லால்லோ டீரை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கனடாவின் டேனிஸ் ஷபலோவ், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், கனடாவின் டேனிஸ் ஷபலோவ், அர்ஜெண்டீனாவின் பப்லோ கியூவாசுடன் மோதவுள்ளார்.