தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வைத்துள்ளார்.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயமடைந்த 16 பேரின் குடும்பங்களுக்கு அரச வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். குறித்த அறிவுறுத்தலுக்கு அமைய தற்போது பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கல்வி அடிப்படையில் இந்த பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.