இந்தியாவிற்குள் தஞ்சம் கேட்டு 6 ஆயிரம் மியன்மார் அகதிகள் காத்துக்கொண்டிருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவிக்கையில், மியன்மாரில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைய அனுமதி கோரி 5 ஆயிரம் – 6 ஆயிரம் அகதிகள் காத்துக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
மார்ச் மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை 1700 இற்கும் மேற்பட்டோர் அகதிகளாக மியன்மாரில் இருந்து தாய்லாந்திற்கு சென்றுள்ளதாகவும், அவர்களில் சிலர் மீண்டும் மியன்மார் வந்துசேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேறுபவர்கள் அதிகரித்துள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.