வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் நின்றிருந்த நபர்களை பொலிஸார் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா நகருக்குள் நுளையும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வவுனியா நகரில் அத்தியாவசிய உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்கள், வங்கிகள் போன்றவை திறந்திருப்பதுடன் ஏனைய வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை திறந்திருக்கும் வியாபார நிலையங்களிற்கு இன்று கள விஜயம் செய்த பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் அங்கு முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் நாடியில் முகக்கவசம் அணிந்தவர்களை பிசிஆர் பரிசோதனையினை முன்னெடுப்பதற்காக வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.