கிழக்கு கொங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் 15பேர் உயிரிழந்துள்ளதோடு 500க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
கோமா நகர் அருகே உள்ள நைராகோங்கோ எரிமலை தற்போது கொதித்தெழும்பியுள்ளதால், கோமா நகரத்திலிருந்து அருகிலுள்ள எல்லையைத் தாண்டி ருவாண்டாவிற்கு 5,000பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் 25,000பேர் சாகேவில் வடமேற்கில் தஞ்சம் புகுந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின், குழந்தைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
170க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. மேலும் யுனிசெப் அதிகாரிகள் பேரழிவைத் தொடர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ போக்குவரத்து மையங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறினர்.
கடந்த 2002ஆம் ஆண்டு எரிமலை வெடித்ததில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடற்ற நிலையில் இருந்தனர்.