நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருகோணமலையிலுள்ள மக்களும், ஏனைய பகுதிகளிலுள்ள மக்களைப்போன்று சுமூகமான முறையில் பொருள் கொள்வனவு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பொருள் கொள்வனவில் ஈடுபட்ட மக்கள் அனைவரும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு பகுதியை விட்டு வேறு பகுதிகளுக்கு மக்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.