இந்த ஆண்டின் முதல் சந்திரக்கிரகணம் இன்று (புதன்கிழமை) நிகழவுள்ளது. இதன்போது வானில் “சூப்பர் மூன் மற்றும் பிளட்மூன்” எனப்படும் இரத்த நிலா தோன்றும் என வானிலை ஆய்வு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நடப்பாண்டிற்கான சந்திர கிரகணம் இன்று மாலை 3:15 மணியளவில் வானில் தோன்றும் அதேவேளை மாலை 6:23 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாலை 4:39 மணி முதல் 4:58 மணிவரை முழு சந்திர கிரகணம் தெரியகூடியதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் சில பகுதிகளான ஒடிசா, அந்தமான், நிக்கோபார் தீவின் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் அரை சத்திரக்கிரகணத்தை பார்க்கக்கூடியதாக இருக்கும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.