டெல்லியில் கடந்த 2 நாட்களில் நூறுபேர் கறுப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ‘ டெல்லியில் கறுப்பு பூஞ்சையாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 23 ஆம் திகதி 200 இற்கும் மேற்பட்டோருக்கு கறுப்பு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 600 இற்கும் மேற்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மற்றும் 25 ஆம் திகதிகளில், டெல்லியை சேர்ந்தவர்கள் மற்றும் டெல்லிக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் என 100 பேருக்கு கறுப்பு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.