கொரோனாவுக்கு எதிரான போரில் உயிர் காக்கும் மருந்துகள், உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பது கொடூரமானது எனவும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்காகவும், வென்டிலேட்டர்களுக்காகவும், மருந்து, தடுப்பூசிகளுக்காகவும் தடுமாறி வருகிறார்கள்.
ஆனால் உயிர் காக்கும் பொருட்கள், மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதித்து வசூலிப்பது கொடூரத்தையும், உணர்வற்ற நிலையையும் காட்டுகிறது.
கொரோனாவுக்கு எதிரான போரில் பயன்படும் உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.