கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக ஃபைஸர் மற்றும் மொடர்னா உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு இந்தியா 3 விதமான தடுப்பூசிகளை பயன்படுத்துகிறது.
மேலும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய மருந்துகளின் உற்பத்தியும் தற்போது அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வியும் சில தனியார் வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படுகின்றது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.