ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தடுப்பூசியான ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதியை பிரித்தானியா வழங்கியுள்ளது.
ஒரே அளவு மட்டுமே செலுத்தப்படும் ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசி, ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசி பரவலை தடுப்பதில் ஒட்டுமொத்தமாக 67 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகக் தரவுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சில ஆய்வுகள் இது மருத்துவமனையில் சேருதல் மற்றும் இறப்பு ஆகியவற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பையும் வழங்குகிறது என்று கூறுகின்றன.
இந்தநிலையில் தொற்று அதிகரிப்பை தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கியுள்ள பிரித்தானியா, ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கூறுகையில், ‘நமது தடுப்பூசி திட்டத்திற்கு உந்துதல் அளிக்கும் செய்தி இது. அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஒரு அளவு தடுப்பூசியான ஜோன்சன் கொவிட்-19 தடுப்பூசி, வைரஸிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்க உதவும்’ என தெரிவித்தார்.
மேலும், இந்த ஒப்புதலை பிரித்தானியாவின் மிகப்பெரிய வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்திற்கு மேலும் ஊக்கமளிப்பதாக சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் விபரித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இது ஏற்கனவே 13,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இந்த மோசமான வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்க உதவும் நான்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள் இப்போது எங்களிடம் உள்ளன.
ஜோன்சென் ஒற்றை அளவு தடுப்பூசி என்பதால், ஒவ்வொருவரும் தங்கள் தடுப்பூசிகளைப் பெற ஊக்குவிப்பதற்கான எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதோடு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு ஊக்குவிப்பு திட்டத்தைத் தொடங்குவதற்கும் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கும்’ என கூறினார்.
இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம், 20 மில்லியன் அளவு தடுப்பூசிக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் ஏற்கனவே அஸ்ட்ராஸெனகா, ஃபைஸர், மொடர்னா ஆகிய மூன்று தடுப்பூகள் பாவனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.