மன்னார்- இலுப்பைக்கடவை படகு துறை பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தமை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் இலுப்பைக்கடவை பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான வினோதன் (வயது-34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பஸ்தர், இலுப்பைக்கடவை படகு துறை கடற்கரை பகுதியில், மீன் வலை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளையில் திடீர் என மயங்கி விழுந்துள்ளார்.
இதன்போது அருகில் இருந்தவர்கள் அவசர அம்புலன்ஸ் ஊடாக பள்ளமடு வைத்தியசாலைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர்.
ஆனாலும் அவர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.