தமிழகத்தை பாதுகாப்பதே அரசின் முதல்வேலை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்திய அவர், பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்த தெரிவித்த அவர், “தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு காரணமாக தொற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையிலும் அமைக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் ஒக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. படுக்கை தட்டுப்பாடு இல்லை. அதிகளவு ஒக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கை அறைகளை உருவாக்கி உள்ளோம்.
இனி வரும் அடுத்த அடுத்த அலைகளை சந்திக்க தமிழக அரசு தயாராக உள்ளது. தமிழகத்தை பாதுகாப்பது தான் அரசின் முதல் வேலை’ எனத் தெரிவித்துள்ளார்.