பாலஸ்தீனத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பாலஸ்தீனத்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து மூன்று இலட்சத்து 661பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 59ஆவது நாடாக விளங்கும் பாலஸ்தீனத்தில் இதுவரை மூன்று இலட்சத்து எட்டாயிரத்து 48பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மூவாயிரத்து 495பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 210பேர் பாதிக்கப்பட்டதோடு 3பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்து 892பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 24பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.