உக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 22இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் 22இலட்சத்து ஆயிரத்து 472பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 16ஆவது நாடாக விளங்கும் உக்ரேனில் இதுவரை 50ஆயிரத்து 472பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 703பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 84பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 852பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 177பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 20இலட்சத்து 36ஆயிரத்து 148பேர் பூரண குணமடைந்துள்ளனர்.