மியன்மாரில் இராணுவ ஆட்சி தொடர்ந்தால், சுமார் 34 லட்சம் மக்கள் பட்டினிக்கு இலக்காக கூடும் என சர்வதேச உணவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மியன்மாரில் இராணுவத்திற்கு எதிரான செயற்பாடுகளால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. இதன் காரணமாக மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. பெரும்பாலான மக்கள் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
மேலும், அனைத்து பொருட்களின் விலையும் மிக அதிகமாக உயர்ந்துவிட்டது. பலருக்கு உணவு பொருட்கள் வாங்க கூட பணம் இல்லை. இதனால் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டனர்.
இதே நிலை நீடித்தால் இன்னும் சில மாதங்களில் பெரும்பாலான மக்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும் என்று சர்வதேச உணவு அமைப்பு எச்சரித்துள்ளது.
எனவே சர்வதேச சமுதாயம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச உணவு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.