வடக்கு அயர்லாந்தில் தங்களுக்கு கொடுத்த கடமைகளை சிறப்பாக செய்து முடித்த பெருமிதத்தோடு, இராணுவ மருத்துவர்கள் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசிளை செலுத்து பணிகளிலிருந்து வெளியேறுகின்றனர்.
வடக்கு அயர்லாந்துக்கு அவசர உதவி கோரப்பட்டதையடுத்து பெல்ஃபாஸ்டின் எஸ்எஸ்இ அரங்கில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு சுமார் 100 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
தற்போது தங்களது கடமைகளை வெற்றிகரமாக முடித்த பின்னர் அவர்கள், வெளியேறுகின்றனர். இதுகுறித்து றோயல் வான் படையின் மார்ஷல் சீன் ரெனால்ட்ஸ் கூறுகையில்,
‘நாங்கள் பணியாற்றியதை எண்ணி மிகவும் பெருமிதம் கொள்கிறோம். எஸ்எஸ்இ அரங்கில் உள்ள அனைத்து தடுப்பூசிகளிலும் 85 சதவீதம் இராணுவ வீரர்களால் நிர்வகிக்கப்பட்டன’ என கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சில உள்ளூர் மருத்துவமனைகளிலும் இராணுவம் நிறுத்தப்பட்டது.
மொத்தத்தில், கடந்த 12 மாதங்களில் வடக்கு அயர்லாந்தில் 500க்கும் மேற்பட்ட இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் சுகாதார அவசரநிலைக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.