ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கான தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எட்டப்பட்டதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரிய அளவிலான தோல்வியை சந்தித்த ஐக்கிய தேசிய கட்சிக்கு தேசிய பட்டியல் ஆசனம் மட்டுமே கிடைக்கப்பெற்றது.
இந்நிலையில் தேர்தல் இடம்பெற்று கடந்த ஓராண்டுக்கு பின்னர் பல இழுபறிக்கு மத்தியில் தேசியப் பட்டியலுக்கான உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.