நியூஸிலாந்தில் வெள்ள நிலைமை மோசமாகும் என்று எதிர்பார்ப்பதால், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கேன்டர்பரி பிராந்தியத்தில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளை கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
முழு கேன்டர்பரி பிராந்தியத்திற்கும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஆறுகளில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு நீர் நிலைகள் உயர்ந்ததால் குறைந்தது 300 வீடுகளில் உள்ளவர்கள் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டன என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றது.
பல நெடுஞ்சாலைகள், பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டன. ஆஷ்பர்டன் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த சிலரை மீட்பதற்காக நியூஸிலாந்தின் பாதுகாப்புப் படைகள் ஹெலிகொப்டர்களை பணியில் ஈடுபடுத்தியது.
நியூஸிலாந்தில் சில பகுதிகளில் 300 மில்லிமீட்டர் (11.8 அங்குலங்கள்) வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேன்டர்பரியின் முக்கிய நகரமான கடலோர கிறிஸ்ட்சர்ச்சில், முன்னறிவிப்பாளர்கள் சுமார் 100 மி.மீ மழை வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது மே மாதத்தின் சராசரியை விட அதிகமாக இருக்கும்.