கறுப்பு பூஞ்சை தொற்று தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கறுப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து ராகுல் காந்தி பல கேள்விகளை எழுப்பி ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதிவில், “கறுப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவையான ஆம்போடெரிசின் பி மருந்து பற்றாக்குறையை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை நோயாளிகளுக்கு கொடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?
இந்த நோயாள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல், அரிசின் வழிமுறைகளில் சிக்கி அலைக்கழிக்க வைப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.