இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புள்ளிவிபரங்களின் படி ஒவ்வொரு ஆண்டிற்கும் ஏறக்குறைய 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறியமுடிகிறது.
ஒவ்வொரு 8 நிமடங்களுக்கும் ஒரு குழுந்தை காணாமல்போயுள்ளதாகவும், அவர்களில் 25 சதவீதமானோர் கண்டுப்பிடிக்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகள் மீட்கப்படுகிறார்களா? அப்படியானால் சராசரியாக எந்தனை குழந்தைகள் மீட்கப்படுகிறார்கள்? அப்படி மீட்கப்படும் குழந்தைகளில் எத்தனைபேர் மறுவாழ்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்? இப்படி பல கேள்விகள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றது.
உண்மை நிலைவரங்களின் படி கடத்தப்படுகின்ற குழந்தைகளில் பெரும்பாலனவர்கள், பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்தப்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. பல திரைப்படங்களில் நாம் இதை பார்த்திருந்தாலும், அதன் யதார்த்த நிலைமையை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியா முழுவதும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் போதைப்பொருள் வன்முறை அச்சுறுத்தளால் பிச்சை எடுக்கவைக்கப்படுவதாக தரவுகள் கிடைத்துள்ளன.
சிறார் நீதி பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இது குற்றம் என்றாலும், இதற்காக வெறும் 3 வருட சிறை தண்டனை வழங்கப்படுவது சற்று அதிருப்தியை ஏற்படுதும்படியாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவர்களுக்கான மறுவாழ்வை ஏற்படுத்தி கொடுப்பது அரசின் தலையாய கடைமையாகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.