சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மத்திய அமெரிக்க நாடுகளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் உள்ளூர் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின் ஆரோக்கியம் குறித்தும் அண்டனி பிளிங்கன் கவலை வெளியிட்டார்.
சவால்களை எதிர்கொள்வதற்கும் இந்த தருணத்தின் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கும் நல்லாட்சி முக்கியமானது என்றும் ஆனால் பிராந்தியத்தின் பல பகுதிகளிலும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றதாகவும் கூறினார்.
என இந்த பிரச்சினையை தீர்க்க பிராந்திய ஒத்துழைப்பு இப்போது முன்னெப்போதையும் விட முக்கியமானது என பிளிங்கன் குறிப்பிட்டார்.
மத்திய அமெரிக்க நாடுகளான குவாத்தமாலா, ஹோண்டுரஸ் மற்றும் எல் சல்வடோர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல குடியேற்றவாசிகள் அமெரிக்க எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.