இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா மட்டுமே கவலையளிக்கும் வகையில் இருப்பதாக உலக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட பி.1.617 என்ற உருமாறிய கொரோனா, தொற்று, பரவல் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வகை கொரோனா வைரஸ் மக்களின் நலுனுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக கூறியுள்ள குறித்த நிறுவனம் மற்ற இரு வகைகளும் வீரியம் குறைந்தவை எனவும் தெரிவித்துள்ளது.