கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை நாடு எதிர்கொள்வதாக ஸ்கொட்லாந்தின் தேசிய மருத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முடக்க கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுவதனால் சமூகத்தில் அதிக நோயாளிகள் அடையாளம் காணப்படுவதை தவிர்க்க முடியாது என பேராசிரியர் ஜேசன் லீச் தெரிவித்தார்.
மேலும் கடுமையான நோயையும், குடும்பங்களுக்கு துயரத்தையும் மரணத்தையும் ஏற்படுத்திய தொற்றை முழுமையாக கட்டுப்படுத்துகிறீர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினர்.
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த முடிவை ஸ்கொட்லாந்து முதல் மந்திரி நிக்கொலா ஸ்டர்ஜன் மாற்றியதை அடுத்து அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.