இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அண்மைக் காலமாக குறைவடைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 105 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 84 இலட்சத்து 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 63 இலட்சத்து 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 17 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 889 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.