இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது டேவோன் கோன்வே 136 ஓட்டங்களுடனும் ஹென்ரி நிக்கோல்ஸ் 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
லோட்ஸ் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் டொம் லதம் 23 ஓட்டங்களுடனும் கேன் வில்லியம்சன் 13 ஓட்டங்களுடனும் ரோஸ் டெய்லர் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஒல்லி ரொபின்சன் 2 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை நியூஸிலாந்து அணி இன்று தொடரவுள்ளது.