தமிழகத்தில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் எதிர்வரும் 7 ஆம் திகதிவரையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் ஊரடங்கை நீட்டிபதா அல்லது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமுல்படுத்துவதா என்பது குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.