கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் வைரஸ் தொற்றினால் 90ஆயிரத்து 353பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் கொலம்பியாவில் இதுவரை 34இலட்சத்து 88ஆயிரத்து 46பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 28ஆயிரத்து 624பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 545பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 55ஆயிரத்து 633பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆறாயிரத்து 582பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 32இலட்சத்து 42ஆயிரத்து 060பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.