இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 371 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 85 இலட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 65 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 16 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 2706 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.