12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்- சிறுமியர்களுக்கு ஃபைஸர்- பயோஎன்டெக் கொவிட் தடுப்பூசியைப் பயன்படுத்த பிரித்தானிய மருத்துவக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பமாகின்றன. இது மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளுக்கு அச்சமின்றி செல்ல வழிவகுக்கும்.
சிறுவர்- சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் இந்த பணிகள் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகவில்லை.
12 வயது முதல் 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் (எம்.எச்.ஆர்.ஏ) மற்றும் மனித மருந்துகளுக்கான சுயாதீன ஆணையம் (சி.எச்.எம்) ஆகியவை ஃபைசர் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என ஃபைசர் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் அமெரிக்காவின் மத்திய நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, பைஸர் நிறுவனத் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுள்ள பிரிவினருக்குப் பயன்படுத்த அனுமதி அளித்தது. அதேபோல் கனடாவும் அனுமதி அளித்துள்ளது.
ஜேர்மனியில் 12 வயதுக்கு அதிகமான சிறுவர், சிறுமிகளுக்கு ஜூன் 7ஆம் திகதி பைஸர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.