மட்டக்களப்பு- ஆயித்தமலை பகுதியில் சட்டவிரோதமாக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்தவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு புலனாய்வு பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அந்த தகவலுக்கமைய நேற்று, (வெள்ளிக்கிழமை) குறித்த பகுதியிலுள்ள வீட்டினை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கு மறைத்து வைக்கப்பட் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியை மீட்டதுடன், ஒருவரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை ஆயித்தமலை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.