அனைத்து வங்கிகளையும் திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடு காரணமாக பல தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஒன்லைன் வங்கியைப் பயன்படுத்துமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரிவித்துள்ளன.
பெரும்பாலான தனியார் வங்கிகள் ஜூன் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டு திங்களன்று மீண்டும் திறக்கப்படும் என அறிவித்துள்ளன.
இந்தநிலையிலேயே அனைத்து வங்கிகளையும் திறக்குமாறு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அனைத்து வங்கிகளையும் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், பரிவர்த்தனைகள் சீராக நடைபெறும் நோக்கத்திற்காக வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் சேவைகளை முன்னெடுக்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.