இலங்கையில் இதுவரை 3 இலட்சத்து 53 ஆயிரத்து 789 பேருக்கு முளுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்று மட்டும் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மேலும் 487 பேருக்கு செலுத்தப்பட்டதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மேலும் 19,567 பேருக்கு நேற்று சினோபோர்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் இதனை அடுத்து குறித்த தடுப்பூசியை பெற்றுகொண்டோரின் மொத்த எண்ணிக்கை 989,574 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இதுவரை 64,986 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.