இரண்டாவது கொவிட் தடுப்பூசி அளவை பெற்ற பின்னரே பாதுகாப்பு ஏற்படும் என பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.
ஆகவே தற்போதைக்கு வெளிப்புறங்களில் முகக்கவசம் அணியும் கட்டாயத்தினை நீக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘முதல் அளவு கொரோனத் தடுப்பூசி போட்டவுடன், பலர் சுகாதாரக் கட்டுப்பாடுகளில் அவதானம் செலுத்த மறக்கின்றனர். இது ஆபத்தானது.
முதல் அளவு தடுப்பூசி மிகச் சொற்பமான பாதுகாப்பையே வழங்கும். இரண்டாவது அளவு தடுப்பூசியும் போட்டு, பத்து நாட்களிற்குப் பின்னர்தான் பாதுகாப்பு ஏற்படும். அதன் பின்னரும் சுகாதாரக் கட்டுப்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டும்’ என கூறினார்.
பிரான்ஸில் இதுவரை கொவிட்-19 தொற்றினால் 5,713,917பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 110,062பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் கொரோனாத் தடுப்பூசிகள் போடப்பட ஆரம்பித்த காலத்தில் இருந்து ஜுன் 7ஆம் திகதி வரை 28 மில்லியன் பேர் கொரோனத் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.