பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்படுவோரை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவில் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் 9ஆம் பிரிவின் கீழ், இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை தடுப்புகாவல் அனுமதியுள்ள காலம் வரையில் கிருலப்பனையில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவிலேயே தடுத்து வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.