நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பது தொடர்பாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் வடகொரியாவின் பொருளாதாரத்தை சீரமைப்பது குறித்து அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஆலோசனைகளை வழங்கினார்.
நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நிலையான மாற்றங்களை கொண்டுவர தேவையான திட்டங்களை அதிகாரிகளுக்கும் அவர் ஆலோசனையாக வழங்கினார்.
நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் சிறிய அளவிலானது எனவும் இந்த வார இறுதிக்குள் மிகப்பெரிய ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் எனவும் வடகொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது முதல் உலக நாடுகளுடனான தொடர்பை துண்டித்த வடகொரியா, தற்போது கொரோனா பரவலை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சரங்கு கப்பல்கள் வடகொரியாவுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டதால், மக்கள் போதிய வருமானம், வாழ்வாதாரம் இல்லாமல் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.