மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து மக்களின் உயிர்களை காத்திட தமிழக அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களும், அல்லும் பகலும் அயராது தம் உயிரை துச்சமென மதித்து அரும்பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சில நோயாளிகள் உயிர் இழக்க நேரிடும்போது மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களை நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியுள்ள சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளன.
இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.