யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக இருந்த சிறிய பிள்ளையார் கோவில் விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.
யாழ். – கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில் இந்தப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.
குறித்த, கோவில் நேற்று (திங்கட்கிழமை) இரவு விசமிகளால் இடித்தழிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து, அந்தப் பகுதி மக்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையை முன்னெடுத்ததுடன் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.