• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

அபிவிருத்தியில் பங்களிப்பினை வழங்குவோம் – வவுனியா வளாகமுதல்வர்!

1.042 Views
4 years ago
72 1
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    0 Subscriber

    இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்தியிலும், வடமாகாண அபிவிருத்தியிலும் நாட்டின் அபிவிருத்தியிலும் வவுனியா பல்கலைகழகம் தமது பங்களிப்பினை வழங்கும் என யாழ்.பல்கலைகழக வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    வவுனியா வளாகம் பல்கலைகழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ள விடயம் தொடர்பாக நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்றைய நாள் ஒரு மகிழ்ச்சிகரமான நாள்.

    எதிர்வரும் 8ஆம் மாதத்தில் இருந்து வவுனியா வளாகமானது பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

    வவுனியா வளாகமானது 1991 ஆம் ஆண்டு வடமாகாண இணைந்த பல்கலைகழகமாக ஆரம்பிக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது.

    அதனை பல்கலைகழகமாக தரமுயர்த்துவதற்கான செயற்பாடு நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கையானது வவுனியா வளாகசமூகத்தினராலும், வன்னிப்பிரதேச மக்களினாலும் அரசியல்வாதிகளாலும் நீண்டகாலமாக விடுக்கப்பட்டு வந்தது.

    அந்தவகையில் இது அரச வர்தத்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது  வவுனியா வளாகசமூகத்திற்கும் வன்னிப்பிரதேச மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான, நிகழ்வாகும்.

    இந்த சந்தர்ப்பத்தில் அதனை தரமுயர்த்துவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்பினை செய்தவர்களிற்கு நாங்கள் நன்றி கடமைப்பட்டவர்கள்.

    அவர்களிற்கு வளாக சமூகத்தினது நன்றிகளை தெரிவித்துக்கொண்டு. வன்னிப்பிரதேச மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்,

    இது தொடர்பாக வன்னியில் உள்ள அரசியல்வாதிகளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எமது நோக்கத்தை நிறைவுசெய்வதற்கு பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.

    அத்துடன் ஊடகத்துறையினரும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்தியிருந்தனர். அவர்களிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்தியிலும், வடமாகாண அபிவிருத்தியிலும் நாட்டின் அபிவிருத்தியிலும் கல்வி பொருளாதாரம், கலாசாரம் மென்மேலும் அபிவிருத்தி செய்வதை நோக்கமாக்கொண்டு இந்தப்பிரதேசத்திற்கு பொருத்தமான கல்வியினையும் புதிய புதிய தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய கல்வியினை, வழங்கக்கூடிய கற்கைநெறிகளையும் புதிய பீடங்களை ஆரம்பிப்பதற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம்.

    விரைவில் மருத்துவத்துறைசார்ந்த கல்வியினையும் வழங்குவதற்கு நாம் கருத்துக்களை பகிர்ந்துள்ளோம். நீண்டகால கனவை நிறைவுசெய்வதற்காக தோளோடு தோள்நின்று மக்கள்ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Related

    Category: இலங்கை பிரதான செய்திகள் வட மாகாணம் வவுனியா
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    தபால்மூல வாக்குப் பதிவுக்கான மூன்றாம் நாள் இன்று!
    இலங்கை

    உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது!

    2025-04-29
    இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!
    இலங்கை

    இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

    2025-04-29
    கனடா நாடாளுமன்றத்  தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத்  தமிழர்கள்!
    உலகம்

    கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத் தமிழர்கள்!

    2025-04-29
    ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!
    உலகம்

    ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

    2025-04-29
    உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!
    இலங்கை

    உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

    2025-04-29
    படலந்த  அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!
    இலங்கை

    படலந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

    2025-04-29
    Next Post
    இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – சுகாதாரத் துறையினரின் எச்சரிக்கை!

    இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - சுகாதாரத் துறையினரின் எச்சரிக்கை!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.