மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 533 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட 187 மாதிரிகள் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.