ரஷ்யா- மொஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்கும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய, ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் மற்றொரு தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கொண்டுவரப்பட்ட 65,000 தடுப்பூசிகளில் 15,000 இரண்டாம் கட்ட தடுப்பூசிகளும் 50,000 முதலாம் கட்ட தடுப்பூசிகளும் இலங்கைக்கு கிடைத்துள்ளன.
ஒளடத உற்பத்திகள் மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தடுப்பூசி தொகுதி, இலங்கை அரசாங்கத்துக்கு ரஷ்ய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மூன்றாவது தொகுதியாகும்.
மேலும் கடந்த மாதம் மே 04 ஆம் திகதி முதல் தொகுதியாக 50, 000 தடுப்பூசிகளையும் கடந்த மே 27 ஆம் திகதி, இரண்டாவது தொகுதி 50,000 தடுப்பூசிகளையும் இலங்கைக்கு ரஷ்யா அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.