இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 738 பேர் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 715 பேரும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 23 பேருமே இவ்வாறு தொற்றுடன் அடையாள காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 16 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 31 ஆயிரத்து 986 பேர் தொடர்ந்தும் வைத்தியசலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.