மட்டக்களப்பில் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவருக்கு புது வகையான வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நுண் உயிரியல்துறை விசேட வைத்திய நிபுணர் பி. தேவகாந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
வீரியம் கூடிய திரிவுபட்ட யுகே பி.117 ஆல்ஃபா வைரஸ் தொற்றே இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த மே மாதம் நடுப்பதியில் தொற்றுக்குள்ளாகிய நோயாளியின் மாதிரியை பரிசோதிக்கும் போதுதான் இந்த யுகே. பி 117 ஆல்ஃபா வைரஸ் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் எவ்வாறு மட்டக்களப்பிற்குள் வந்தது, நோயாளி எவ்வாறு தொற்றுக்கு உள்ளாகினார் எவ்வளவு தூரம் பரவி இருக்கின்றது என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.
இது தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரி மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.